காத்திருக்கும் நேரத்தினை
வீணானதென எப்படிச்சொல்ல
ஏதோ ஒரு பொன்உருகலுக்கான
காத்திருப்பின் இடையேதானே
அழுது களித்து ரசித்து வெறுப்பேறி
வாழ்க்கை கடக்கிறது
***********************************************
கொலுசுப்பட்டையில்
சிக்கி இழுபடும்
பாவாடை நூல்போல
பிசிறாகத்தொங்கும்
நினைவுகளை மிதித்துக்கொண்டே
நடக்கப் பழகிவிடுகிறாள்
*************************************
வீடு ஒழித்தல் திருவிழாவில்
வழக்கம்போலக்
கிடைக்கின்றன
கைமறதியாய் வைத்த
ஒன்றிரண்டு பொருட்களும்
எக்கச்சக்க நொடிகளும்
முடிந்தாற் போலத்தான்
*************************************
அத்தனை நசுங்கிய அலுமினிய அன்னக்கூடையைக்
குழந்தை போல ஏந்திக்கொண்டு போகிறாள்
அது அரையுடுப்போடு எங்கோ சுற்றுகிறது
அவள் பாசம் அப்படி என்கிறது
ஒரு நொடி உயிர்பெற்ற அவள் கூடை மீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக