சமீபத்திய மழையில்
கலைந்துபோன பனியின் பயணம் அது
எப்போதும் போல்
அமையாத வருடத்திலிருந்து
தன்னை உதறிக்கொண்டு புறப்பட்டபோது
ஆண்டுச்சாலையில்
சுங்கச்சாவடிகள் நிர்மாணிக்கப்பட்டதை
அது அறியவில்லை
ஏன் தடைப்படுகிறது பயணம் என
எரிச்சலாகி எட்டிப் பார்த்தபோதுதான்
சுங்கச்சந்தா கட்டாத தன் தவறு புரிந்தது
என்ன நடக்கிறதென்று எனக்குதான் தெரியவில்லை
உங்களுக்கெல்லாம் என்ன கேடு
என்று எரிச்சலுடன் கத்தியது
உன் பயணம் மட்டுமல்ல
எங்கள் பயணங்களும் யாராலோ
தீர்மானிக்கப்படுகின்றன
சில சமயம் உள்ளூர் அரசியல்வாதி
சிலசமயம் தேசிய அறிவாளி
சிலசமயம்
மேலிடப் பார்வையாளன்
சிலசமயம்
முட்டுசந்தில் குடை ரிப்பேர் செய்பவன்
போகணும்னு மட்டும்தான் தோணனும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக