என் ஆற்றங்கரையை அலேக்காகத் தூக்கிக்கொண்டு போனேன்
என் ஊர்ச்சிவன்தான்
தோள் மேல் எப்போதும்
தியாகபாதம்
திருவடி தூக்குந் தருணம்
உதைப்பதுபோலொரு திடுக்கிடல் வேறு
ஊர்க்கழனியெல்லாம் மனையாகிப்
பிளாஸ்டிக்கில் மூச்சுவிடும் நாளிலும்
கணுக்காலில் ஒட்டிய சேற்றைக்
கழுவாத பிடிவாதமெனக்கு
ஒரு தேநீர் பருக வண்டி நிறுத்தும்
வழிப்போக்கனைப் போல்
ஒட்டிலாது பார்க்கும் ஊர்
எப்போது கையசைத்து இறக்கிவிட்டது என்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக