சலவைவரிசை நடுவிலிருந்து ஒரு சேலையை உருவினால்
பக்குவமாக எடுக்கத்தெரிகிறதா
முன்னயோ பின்னயோ
ஒன்று முனை மடங்கியோ
ஒரு மடிப்பு பிசகி வழிந்தோ
குறுகுறுக்க வைத்துவிடுகிறது
இந்த நினைவுகளும் கூட
நிலவு
**********************************
இப்போதுதான் கரேலென்று கிடந்தது
பார்த்துக்கொண்டிருக்கும்போதே
நிகுநிகுவென்று
எந்த இடுக்கிலிருந்து வந்தானென்றே
சொல்ல முடியாதபடி
வெளிச்சம்
விடியல் எப்படியும் நிகழும்
***********************************************
ஒரு திறப்பு வேண்டும் அவ்வளவுதான்
எங்கிருந்தாலும்
விகசிக்கிறது நிலவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக