ஏதோ ஒரு கட்டத்தில்
வழியும் தலைமுடியோடு
வந்துநின்ற தம்பியின்
முகவாய் தொட்டபடி வகிடு எடுக்க
அதுவும் வாகாய்த்தான் இருந்தது
கோதிவிட்டுக் கடக்கும் வண்ணம்
கொஞ்சகாலம்தான் அனுமதிக்கிறது
இணையர்களின் தலை
வெட்கம் உண்டு எங்களுக்குமெனக் கூசிக்கூசி
உதிர்ந்த தளத்துக்கு தாளமோ தட்டலோ
கிட்டலாம் அரிதாக
இருந்தாலும்
இறுக்கம் குறுக்கே
இருக்கும் பின்னே
எண்ணெய் தடவுகையில் அளைய முடியும்
மகன்களின் தலைக்கு கிரீம் உறவாகும்போது
தள்ளிப்போன விரல்களை
நிதானமாக நெட்டி எடுத்துக் கொள்ளலாம்
இந்தப்பையன்கள்தான்
சுற்றிச் சுரண்டி விடுகிறார்களே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக