ஞாயிறு, அக்டோபர் 14, 2018

28 5 18

மழை பார்த்திருந்த பொழுதுகள்
இசை கேட்டிருந்த பொழுதுகள்
கடல் கண்டிருந்த பொழுதுகள்
விரல் கோர்த்திருந்த பொழுதுகள்
வெகு தொலைவிலிருந்த 
அலைவழி உரையாடற் பொழுதுகள்
காதற்பொழுதுகள்
கண்ணீர்ப்பொழுதுகள்
ஏவற்பொழுதும் எரிச்சற்பொழுதும்
இரங்கல்பொழுதும்
எதுவும் புலப்படவில்லை
கைமடித்து விரித்து
பார்த்துக்கொண்டிருக்கும்
பத்து நகங்களிலும்
அந்த காலக்கண்ணாடி இது இல்லையா
******************************************************************

இருளுக்குள் புரண்டு புரண்டு வெளிவரும்
 வெளிச்சமாகவே நெடுக நின்றாய்
இம்முறையும் வந்திருக்கலாமே
சுடும் வெளிச்சத்திலிருந்து
தப்பிக்க இருளும் துணைவரவில்லை
ஒளியும் துணைவரவில்லை
எப்படி அழைப்பதென்றும்
அறிகிலேன்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...