திங்கள், அக்டோபர் 15, 2018

நிழலாகும் ஊர்

ஊர் உங்கள் முதுகில்
மச்சம் போல ஒட்டிக்கொண்டுவிடுகிறது
கண்ணாடியிலாவது முதுகுமச்சம் கண்டுவிட 
முறுக்கிப்பார்க்கும் தவிப்பை
எங்கோ பேருந்துநிலையத்துக்குள் 
எவரோ எவரிடமோ உருட்டிவிடும் 
விளிப்பு சுண்டிவிட்டது
சொல்ல யாருமிலா 
ஊரின் செல்ல விளியை
 கொசுவிரட்டுவதாக 
துரத்திக்கொண்டிருக்கிற ஒருவனையும்
குழந்தையாக நெஞ்சில் 
சேர்த்தணைக்கும் ஒருத்தியையும் 
பார்த்திருந்திருக்கலாம் நீங்கள்
இப்படி கழுத்து சுளுக்கியிருக்காது



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...