திங்கள், அக்டோபர் 15, 2018

குச்சி ஐஸும் குடம் தண்ணீரும்

குச்சிஐஸ் உறிஞ்சிக்கொண்டு போகும்
 மூக்கொழுகி குட்டிப்பையனைப் 
பொறாமையோடு பார்க்கும் மாரியம்மை
அவன்அம்மையின்
ஒருகுடம் தண்ணீரிலோ 
இரண்டுகொத்து வேப்பிலையிலோ 
சமாதானம் அடையப்பழகியவள்
பழக்கியவளோ
அதுவுமின்றி சமாதானம் பெறுவாள்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...