ஃப்ரில் வைத்த சட்டை போட்ட ஒருத்தி
விளம்பரத்தில் சிரித்து மறைந்தாள்
நினைவுததிரையில்
அலையாடின பதின்மநாட்கள்
நான்
ஃப்ரில் வைத்த சட்டை போட்ட
அலையாடின பதின்மநாட்கள்
நான்
ஃப்ரில் வைத்த சட்டை போட்ட
சிறுமியாக உலவியபோது
கல்யாணம் செய்ததற்காகவோ
கால்மேல் கால்போட்டு அமர்ந்ததற்காகவோ
யாரும் யாரையும் வெட்டிய நினைவில்லை
பச்சைநிறநகப்பூச்சோடு சிரித்தவள்
கல்யாணம் செய்ததற்காகவோ
கால்மேல் கால்போட்டு அமர்ந்ததற்காகவோ
யாரும் யாரையும் வெட்டிய நினைவில்லை
பச்சைநிறநகப்பூச்சோடு சிரித்தவள்
வாயில் சுடப்பட்ட நினைவுமில்லை
ஓட்டை தெரியும் காற்சட்டையை
ஓட்டை தெரியும் காற்சட்டையை
திறமையாக அரைஞாண்கயிற்றில்
நிற்கவைத்தவனையன்றி
முதுகெல்லாம் பழுத்த காயங்கள்
முதுகெல்லாம் பழுத்த காயங்கள்
நிறநிறமாய்ப்பூத்தவன் கூட இல்லை
இந்தக்கதைகளின் நடுவே
பூப்போட்ட ஃப்ரில் சட்டையில்
நடனமிடுபவளாக நான் பொருந்தேன்
என்னை இழுத்து
இந்தக்கதைகளின் நடுவே
பூப்போட்ட ஃப்ரில் சட்டையில்
நடனமிடுபவளாக நான் பொருந்தேன்
என்னை இழுத்து
என் பதின்மத்துக்குள் பாதுகாப்பாகப்பூட்டி
நிமிர்ந்தபோது
என் ஃப்ரில் வைத்த சட்டையில்
என் ஃப்ரில் வைத்த சட்டையில்
இந்த ரத்தத்துளிகள் பட்டிருக்குமோ
என்றுமொரு அச்சம்
விளம்பர மங்கை யாதொரு சுணக்கமுமின்றி
விளம்பர மங்கை யாதொரு சுணக்கமுமின்றி
ஃப்ரில் பறக்க நடனம் தொடருகிறாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக