செவ்வாய், அக்டோபர் 16, 2018

வருவதும் போவதும்

வரவிரும்புகிறோமா
போகவிரும்புகிறோமா
வந்து வந்து போக விரும்புகிறோமா
போய்ப் போய் வர விரும்புகிறோமா
வந்ததிலிருந்து போவதா
போனதிலிருந்து வருவதா
வந்ததுதான் போகிறதா
போனதுதான் வருகிறதா
எதற்கும் ஒருபுள்ளி கூட இல்லை
ஆனாலும் 

அழிச்சாட்டியத்துக்குக் குறைவில்லை


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...