திங்கள், அக்டோபர் 15, 2018

சவுக்காரவாழ்வு

கரையிடிந்த குளங்களின் 
துவைகல்லில் படிந்த சவுக்கார வாழ்வு
நீர் பெருகும் நாள்வரை

***********************************************************

திடீரென வந்த மழை
திடீரென வந்துவிட்டதாகவே நம்புவோம்
இல்லையெனில்
பொட்டலத்துக்குள்ளிருந்து
வெளியே குதித்துவிடும்
மனசைக் கட்டிவைக்க 

கையாலாகா துக்கம் வேறு சேர்ந்துகொள்ளும்

******************************************************************

எப்படியும் கேட்டே தீருவதென 
செவிதீட்டிக் காத்திருக்கும்போதுதான் 
இசைக்கு மேலொலிக்கிறது 
இயந்திர இரைச்சல்

*************************************************************

மழைப்பாதையில் பாதமுரசாது 
பாதை வழுக்காது 
துணி சுருட்டி
நடக்கும் யத்தனத்தில் மறந்தே போகிறது 

பின்வரும் கால்களுக்காக 
கல்ஊன்ற நினைத்தது
இப்போது மழையில்லை என்பது
வருத்தமோ சமாதானமோ



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...