என்ன நடந்துவிடும் என்றிருந்தோம்
ஏதோ நடக்கிறது என்றிருந்தோம்
எப்படியோ நடக்கும் என்றிருந்தோம்
ஏதோ நடக்கிறது என்றிருந்தோம்
எப்படியோ நடக்கும் என்றிருந்தோம்
எதுவும் நடக்கும்
என்றறிந்தோம்
என்றறிந்தோம்
*****************************************************
உங்களுக்கென்று ஒரு கட்டுப்பாடு வேண்டாமா
உங்கள் கையில் கிள்ளினாலும் கன்னத்தில் அடித்தாலும்
கழுத்தை அறுத்தாலும்
உங்களுக்கென்று
ஒரு கட்டுப்பாடு வேண்டாமா
நாங்கள் தருவதை வேண்டாமெனச்சொல்ல
நாங்கள் தடுப்பதை
வேண்டுமெனச்சொல்ல
எங்கு போய்க் கற்றீர்கள்?
உரிமை ,கடமை,ஜனநாயகம்
என்றெல்லாம் மறைத்து வைத்த
கெட்ட வார்த்தைகள் பேசுவது
என்ன பழக்கம்?
பள்ளிகளில் கூட
பிரம்பினைத் தடைசெய்த காலத்தில்
அமைதியாக வாழவைக்க
துப்பாக்கிகளை எடுக்குமளவு
மாற்றிவிட்டீர்களே என்றுதான் விசனமாக இருக்கிறது.
சரி
போகட்டும்
பொய்சொல்வதாகவோ,
நடிப்பதாகவோ,
குறை சொல்லாதீர்கள்
கூவாதீர்கள்
முக்கியமாக அதையும் இதையும் தொடர்புபடுத்தும்
அரசியல் விளக்கங்களைக் கேட்காதீர்கள்
மற்றபடி ஒரு குறையும் இல்லாது வாழுங்கள்.
பிழைத்துப்போங்கள்
உங்கள் கையில் கிள்ளினாலும் கன்னத்தில் அடித்தாலும்
கழுத்தை அறுத்தாலும்
உங்களுக்கென்று
ஒரு கட்டுப்பாடு வேண்டாமா
நாங்கள் தருவதை வேண்டாமெனச்சொல்ல
நாங்கள் தடுப்பதை
வேண்டுமெனச்சொல்ல
எங்கு போய்க் கற்றீர்கள்?
உரிமை ,கடமை,ஜனநாயகம்
என்றெல்லாம் மறைத்து வைத்த
கெட்ட வார்த்தைகள் பேசுவது
என்ன பழக்கம்?
பள்ளிகளில் கூட
பிரம்பினைத் தடைசெய்த காலத்தில்
அமைதியாக வாழவைக்க
துப்பாக்கிகளை எடுக்குமளவு
மாற்றிவிட்டீர்களே என்றுதான் விசனமாக இருக்கிறது.
சரி
போகட்டும்
பொய்சொல்வதாகவோ,
நடிப்பதாகவோ,
குறை சொல்லாதீர்கள்
கூவாதீர்கள்
முக்கியமாக அதையும் இதையும் தொடர்புபடுத்தும்
அரசியல் விளக்கங்களைக் கேட்காதீர்கள்
மற்றபடி ஒரு குறையும் இல்லாது வாழுங்கள்.
பிழைத்துப்போங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக