ஞாயிறு, டிசம்பர் 05, 2021

ஓட்டாஞ்சில் பருவம்

 திப்பி திப்பியாக

அதிர்ச்சியின்
கொடூரத்தின்
துயரத்தின் வண்ணங்களைப்
பூசிக்கிடக்கிறது நகரம்
எப்போதும்போல
சிலந்திக்கூடுகளை உடைத்த நாவைத்
துழாவியபடி
நகர்கின்றன
பல்லிகள்.
வியந்து நடுங்கிய சிலந்திகள்
ராபர்ட் புரூசை மறந்துவிட்டன ******************************************
சொரசொரவென சிமெண்டு பூசிய முற்றத்தில்
கட்டங்கள் இருந்தன
பாவாடை தடுக்கி விடாமல் தூக்கிச்செருகிக் கொண்டு
ஓட்டாஞ்சில்லை வீசி வீசித் தாண்டிய கட்டங்கள்
அண்ணாந்த நெற்றியின்மேல் வைத்த சில்லு
நழுவி விடாதபடி
நேக்காகத் தாண்டிய கட்டங்கள்
நொண்டியடிக்கையில்
ஒற்றைப் பாதத்தில்
கொலுசு ஒலிக்க
குதித்த வேகம் தாங்கிய கட்டங்கள்
தேய்ந்த கோடுவழி
சாக்பீஸ் நினைவூட்டலை
ரசித்த கட்டங்கள்
அப்புறம் ஒருநாள்
சிவப்பு சிமெண்டு வராந்தா
சின்னக்கட்டங்களின்
தாயச்சோழிகளை
மௌனமாக
வேடிக்கை பார்க்கத் தொடங்கின
முற்றத்துக்கட்டங்கள்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...