ஞாயிறு, டிசம்பர் 05, 2021

நடுவீட்டுக்குள் புல்டோசர் சக்கரங்கள்

 கொரோனா

உன்னை வெறுக்க ஆயிரமென்ன
லட்சம் காரணங்கள் உண்டு
பிறந்த நொடி முதல் போராடிப்போராடி
சீண்டலால்
தீண்டலால்
இணக்கமான அணைப்பால்
நறுக்கான சொற்களால்
நறுவிசான பழக்கத்தால்
உழைப்பால்
செங்கல் செங்கல்லாகக் கட்டிய வாழ்வை
சாவு
ஒரு இடி இடிக்கும்தான்
ஒப்பாரியும் மாரடிப்பும் போனாலும்
நாங்கள்
அந்தக் கற்களைக்
கையிலெடுத்தோ
தொட்டுத்தடவியோ
சூளை நாட்களைச் சொல்லியழுவோம்
அர்த்தமுள்ள வாழ்வெண்ணி அடங்கும் ஆவி
உன் புல்டோசர் சக்கரங்கள்
சடசடவென்று இடித்தழிக்கும்
பேரொலியில் அவரவர் காதுகளைப் பொத்தியபடி
பாதுகாப்பான தூரத்துக்கு ஓட
உலர்ந்த
வருந்துகிறேன்
இரங்கல்கள்
ஆறுதல்கள்
சருகுகளாக அலைமோதுகின்றன
அர்த்தமிழந்த
மரணத்துக்கும்
வாசனையில்லை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...