திங்கள், டிசம்பர் 06, 2021

காத்திரு என் காலமே

 ஆயிரம் தூண்களை பூதங்கள் நட்டு விதானம் வைக்குமுன் விடிந்த ஊரில் பிறந்தேன் நான்

அச்சு நாணயங்களையும் அழகுப்பானைகளையும்
புதையவிட்டுப் போன முப்பாட்டன் வம்சம்தானே
மண்மூடிய கலைகள்
காற்று உடைத்த பொம்மைகள்
அழுந்தி அழுந்திக்கரியான கானகங்கள்
சிதிலங்களை மீட்டு மீட்டு
வியர்வை பொங்க சிரிக்கும் மானுடத்தின் பிஞ்சுகள் நாம்
நடுங்கும் மனதைத் தடவிக்கொடுத்தபடி பார்க்க
உங்களிடமும் இருக்குமே
ஏதாவதொரு கோட்டையில் கோயிலில்
கடந்த காலத்தோடு கைகுலுக்கிய படம்
எதிர்காலத்தோடும்
கைகுலுக்குவோம்வாருங்கள்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...