என்னா வெயிலு
என்றபடி
கீரைக்கட்டுகளின்மேல்
தண்ணீரைத் தெளிக்கிறாள்
அந்த லோட்டாவை வாங்கி
அவள் வாடிய முகத்தின்மேல்
தெளிக்க மாட்டோமா என்றிருக்கிறது
மனசுக்குள்
வாய்
இருவத்தஞ்சா அநியாயமால்ல இருக்கு என்கிறது
அடங்காப்பிடாரி
*******************************************************
ஒரு உழக்கு பாலின்
வெண்மை தளர்ந்த சாடையின்
இறுதிக்கோட்டைத்தொடுமளவு
விளாவிய தேநீரை
அளந்து அளந்து
எல்லோருக்கும் தந்தபிறகான
வண்டலைக் குடித்தே பழகிய அம்மா
சொல்கிறாள்
எனக்கு சூடே ஆவறதில்ல என்று
ஏட்டையாவது எடுத்துப்போடு
அப்புறம் அதற்கொரு சாக்கு கண்டுபிடிக்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக