பக்கத்து வீட்டின் சமையலறை
மேடைக்குக்கீழோ
பத்தாயத்தின் மேலோ
சுவாதீனமாக
ஒளிந்து பிடித்து விளையாடிய பிள்ளைகள்
பால்குடி மறக்கடிக்கவென்று
தூக்கிச்செல்லத் தொடங்கி
மூன்றாவது வீட்டுப்பிள்ளையை
இடுக்கிக்கொண்டே
வேலை முடிக்கும்
அத்தைகள்
மருமகளைக் குறை சொல்லியபடி
திண்ணையில் உட்கார்ந்த
எதிர்வீட்டுக் கிழவிக்கும் சேர்த்து
சோறுவடிக்கும் அம்மாக்கள்
இல்லாமல் போகவில்லை
இதைப் படிப்பதில்லை
அவர்கள்
இதைப் படிக்கும்
நம் வாழ்வில்
இல்லாமல் போன
ஆயிரத்தொன்றில்
இவையும் உண்டுதானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக