ஞாயிறு, டிசம்பர் 05, 2021

பிரதி செய்யும் சகடை

 குட்டிப் பந்தாக

மேசைமேல் கிடக்கிறது சாக்லேட்
உச்சியில் ஒரு சிற்றெறும்பு
காற்றில் உருள்கிறது
சாக்லேட்
எறும்பு இப்போதும் உச்சியில்
அவ்வளவு பிடிமானம் ****************************************
குட்டி ஜெம்ஸ்
எண்ணியெண்ணிப் பகிர்ந்த பிரியம்
நிறம் தேடிய சண்டை
எந்த ருசியும் இல்லை
ஒற்றைப் பட்டைகளின்
ஒற்றைப் பிள்ளைகளின்
காலத்தில்
****************************************
சரசரவெனக் கயிற்றை விட்டு
பொத்தென வாளிமுங்கும் தருணம்வரைத்
தெரியவில்லை
உள்ளங்கை எரிச்சல்
அவளுக்குப் பதிலாகக்
கிறீச்சிடுகிறது சகடை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...