அவ்வப்போது
கிருமிஒழிப்பான்களால்
துடைப்பதும்
கழுவுவதுமாக
இருக்கும் கைகளைக் குவித்து விரித்து
ஒரு பூவை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்
மௌனத்தால் உலர்ந்திருக்கும்
என் உதடுகளை நன்றாக ஈரப்படுத்திக்கொண்டு
ஒரு துள்ளிசையை
முணுமுணுக்க விரும்புகிறேன்
கவசம் ஒன்று
கவசம் இரண்டு என்று இறுகப் புதைத்திருக்கும்
என் முகத்திலிருந்து
சோதிச்சுடர்
ஒரு துளியாவது வீச விரும்புகிறேன்
எனக்குத்தெரியும்
ஆழ்மனதில் இதே நாட்டத்துடன் உள்ள
உங்கள் கரங்களும்
கைகுலுக்க நீள்வது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக