அழுத்துவது எது என்றே விளங்காமல் ஆழக்குழிகளுக்குள் விழுவதும் தக்கி முக்கி ஏறுவதும் பின்னொரு மாயக்கரம் தள்ளுவதும்....
உட்கார வைத்து மருந்தடிப்பது
ஒன்றும் புதிதில்லை
*****************************************
யார்வீட்டு குப்பையையோ வைத்து
விளையாடக் கற்றுக்கொண்டார்கள்
யார் வீட்டு மிச்சத்தையோ உண்டு
வயிறடக்க கற்றுக்கொண்டார்கள்
எங்கோ தூங்கவும்
எவருக்கோ அடங்கவும்
கற்றது போலவே
எதற்கோ ஓடவும் கற்றுக்கொண்டு
எங்கள் குழந்தைகள்
நாங்களாகி விட்டார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக