வியாழன், செப்டம்பர் 24, 2020

கட்டாந்தரைக் கப்பல்

 

முழுமையில் ஒன்று குறைந்தது
முழுமை நூறா
ஒன்றா
கேள்வி உயிர்வேலியின் முள்

*****************************************************

நூலேணியின் படிகளில்
உச்சி எது
உயரம் எது
மடித்துவிட முடியும்போது

********************************************

 

மடித்து மடித்து செய்யக்
கற்றுக்கொடுத்தாய்
காகிதக்கப்பல்
அதுவும் மிதக்கிறது
கட்டாந்தரையிலும்

******************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...