கொஞ்சம்போல் தண்ணீர்சிந்தியது
மேசையைத் துடைக்கலாம்தான்
துணி எடுத்துவரவேண்டும்
சற்று யோசித்து
விரல்களால்
தண்ணீரை இழுத்துவிட்டேன்
ஏதோ ஒரு பூ மாதிரி
கிடந்தது
கூடக்கொஞ்சநேரம்
******************************************
யாரோ விதையிட
யாரோ நீரூற்ற
யாரோ ஆடுமாடுவிரட்ட
உன் கவலையெல்லாம்
குப்பை பற்றி
*********************************
உனக்குப் புரியும்
எனக் காத்திருக்கிறேன்
உன்னைத்தவிர
எல்லோரும்
ஆறுதல் சொல்லுமளவு
புரிந்து கொண்டாயிற்று
**************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக