புதன், செப்டம்பர் 23, 2020

திருநீலகண்டம்

 அவள் அணிந்திருந்த துப்பட்டாவில்

இறைந்திருக்கும் பூக்களில்

ஒன்றிரண்டு ஒட்டிவிட்டது

முகம் துடைக்கையில்

கண்ணாடி பார்
****************************************
தோல்வியுற்றவன்
உங்கள் எதிரில் வரும்போது
அசலைக் கவிழ்த்து மூடிவிட்டு
எடுத்து பொருத்திக்கொண்டீர்களே ஒரு நகல்
அதையருந்தியே அவன் வீழ்ந்தான்
அந்த சொச்சம் வாயோர நுரை
அவன்
தொண்டைக்குழி
திருநீலகண்டமா என்ன

***************************************************
நிறைசூலியின் நடை பின்னிப்பின்னி நீள
இழுத்துப்பின்னிய சடை இடுக்கில்
நீள்கிறது
வேப்பிலைச் சிறுகொத்து
வழியில்தான் தீண்டக்கூடும்
ஆகாத பிராணன் என்ற
அசட்டு நம்பிக்கையில்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...