லேசான
வெம்மை
லேசான
இருள்
கொதிக்காத
நெற்றியைத்
தொட்டுப் பார்த்துவிட்டு
சன்னல் வழி கை நீட்டு
சுட்டுவிரலால்
தொட முடிவதுதான் வானம்
சும்மா
பரிதவிக்காதே
அவரவர்
இருக்கிறார்கள்
அவரவர்
பக்கம்
சுட்டுவிரல்
நுனி வானத்தைச்
சற்றே உறிஞ்சு
சிறு
கீறல் ரத்தத்தை உறிஞ்சுவாயே
அது போல
அவ்வளவுதான்
வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக