முழுக்கை சட்டை தைத்து முழங்கைவரை மடித்துக்கொண்டுபோய் முட்டிக்கு சீராக மடிப்புவைக்கும் பக்குவம் வேறெதிலும் இல்லாமற்போன சுந்தரம் மாமா பின்னும் முப்பதுவருடம் வாழ்ந்து முடித்தது ஒற்றைக்கை காற்றிலாடும் சட்டையோடுதான்
***********************************************
வலது மூலையைத் தொட்டால்
நினைவுகள் பரவவும்
மூடவுமாக ஒரு ஏற்பாடு
நீயும் கற்றிருக்கக்கூடாதா
கடவுளே
மூடமறந்து
கொசு மொய்த்தபடியே
கிடக்கிறது பார்
*********************************************************
மூலையில்
அக்கா போடும்
பிங்க் ரோஸ் உடன் முதலெழுத்துக்கள்
எம்பிராய்டரி இல்லாத
கைக்குட்டைகளை
வாங்கி என்ன செய்ய
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக