சமுத்திரக்கரைகள் எப்போதும்போல கிளிஞ்சலுக்குள் சூரியனை அடைக்கப் பார்க்கின்றன
விலாத்தெறிக்க
துடுப்பு தள்ளுகிறான்
மனிதன்
*****************************
எப்படிக் கூப்பிடுவது
நிற்பது அறிந்தும்
நில்லாது போகும்
உன்னை
சற்றே படபடவென்றிருந்திருக்கலாம்
உனக்கும்
பாவம்
**********************************
பிராயத்தின் காற்றில்
மேல்கீழாகப் புரள்கிறது
முன்நெற்றி குழல்கற்றை
ஞாபகங்களோடு
ஒதுக்கிவிட்டுக் கொள்கிறாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக