இருந்தது என்றாய்
இருந்தது என்ற
இறந்தகாலத்துக்காக வருந்தவா
இருந்தபோது
நான் அறியாமல்
இருந்ததற்கு வருந்தவா
இல்லை
எப்போதும்போல் இருந்துவிடவா
***********************************************
வெங்காய வடகத்தைக்
கிள்ளிக்கிள்ளி வைக்கும்போதுகூட
திட்டமான
இடைவெளிகளில் வைப்பவள்
இதை ஏன் இப்படி
கொசகொசவென்று வைத்தாளோ
குறுக்கே ஒரு அம்புக்குறி இட்டாயோ
புரிந்தது
**************************************************
நிஜத்தில் ஒரு மரு கூட
வைத்துக் கொண்டு
வரமாட்டேன் என்கிறது
இன்பமும் துன்பமும்
*************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக