திங்கள், அக்டோபர் 05, 2020

அப்படித்தான்

 

யாராவது சொல்ல விரும்புகிறீர்களா
எங்கோ ஒரு இறுக்கமான
முகத்தின் எதிரில் நின்றுகொண்டு
ஆமாம்
அப்படித்தான் என்று

சரி அதற்குமுன் இங்கு வாருங்கள்
என் கையைக் 
கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்

ரொம்ப சில்லென்று இருக்கிறதே
என யோசிக்க வேண்டாம்

வலிக்கும்படி இல்லாமல்
இறுகப்பற்றிக்கொள்ளுங்கள்

நானும் அந்த அப்படித்தானைச்
சொல்ல வேண்டியிருக்கிறது

சொல்லிவிட்டபின்
இறகாகி
உங்களுக்குத் துணைக்கு வருவேன் 

நிச்சயம்

 

கருத்துகள் இல்லை:

வாழ்வின் சந்நிதானத்தில்

  கூச்சமாக இருக்கிறது பட்ட காலிலே பட்டுக்கொண்டிருப்பவரிடம் இதுவும் கடந்து போகும் எனத் தத்துவம் சொல்லி நகர ********************************...