புதிய பசிய கறிவேப்பிலையை ஈர்க்கிலிருந்து சரசரவென உருவி கொழுந்துமல்லித் தழைகளையும் சேர்த்துக் கொதிக்கும் ரசத்தில் போடும் கையா
நீரூற்றிக் களையெடுத்தது
*********************************************
மழுமழுவென மின்னும் பீங்கான்
தொட்டியிலிருந்து
கிள்ளிவந்த மணிபிளாண்டுக்கு
பழைய பால் பாட்டிலோடும்
பேதமில்லை
*********************************************
நட்சத்திரம் இறைந்த துப்பட்டா
வாங்கியபோது
நினைக்கவில்லை
வானத்தை இப்படிப் போர்த்திக்
கொள்ளமுடியுமென்று
**************************************
தினம் நடக்கிற வழிதான்
தினம் வருகிற வெயில்தான்
என்றாவதுதான்
நிமிர்ந்து பார்க்க வாய்க்கிறது
கை வைத்து மறைத்தபடியாயினும்
*************************************
விதைத்தது நீ என்று உலகு அறியும்
வேரின் நுனி
உன் கையில்
என்ற ரகசியம் எனக்கு மட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக