வெள்ளி, அக்டோபர் 02, 2020

ஆசையில் தீ வைக்கிறேன்

 

கிணற்றுக்குள்
சிறு ஒளி அலைபோல 
நகர்வதும் ஒளிவதுமாக
கயிறு இறக்கவும்
அலமலப்பாக உரையாடவுமாக 
மேலே நிற்கிறார்கள்
நுனி எப்போது பிடிபடுமோ

*******************************************

 

புதிய நாள்தான்
வேண்டுமென்றில்லை
பழைய
மிகப்பழைய
மிக மிகப்பழைய
ஏதாவதொன்றைக்கொடு
ஏறிஇறங்காத வெயிலைத் தாங்க முடியவில்லை

 

*************************************************

 

உன்மேல் எனக்கொன்றும்
விரோதமில்லை

பூமத்திய ரேகை
துருவத்தில் இருக்க வேண்டுமென்ற
உன் ஆசையில்தான்
தீயை வைக்க விருப்பம்

 

 

கருத்துகள் இல்லை:

வாழ்வின் சந்நிதானத்தில்

  கூச்சமாக இருக்கிறது பட்ட காலிலே பட்டுக்கொண்டிருப்பவரிடம் இதுவும் கடந்து போகும் எனத் தத்துவம் சொல்லி நகர ********************************...