அரஹர சிவனே அண்ணாமலையே
பாட்டில்தான்
தேயிலைத்தூளைச் சற்றுக் கூடுதலாக
இடவேண்டுமென்ற முடிவெடுக்கிறேன்
இலக்கணம் மாறுதோ ஒலிக்க
இட்லி குக்கர் அடுப்பிலேற்றுகிறேன்
இஞ்சி பூண்டு வெங்காயம்
பச்சை மிளகாய் அஞ்சரைப்பெட்டி
அனைத்தும் பக்கத்தில் வைத்தபடி
துவங்கும் சமையல் மேடையில்
நடுவில் இருக்கிறீர்கள் நீங்களும்
ஒரு சிருங்காரச் சிரிப்போடு
பாருங்கள்
தாளிப்பின் நெடியில் ஒரு ராராரீ வேறு
அவசரங்களினூடே
நிதானத்தையும்
ஆத்திரங்களூடே பக்குவத்தையும்
மண்டைக்குள் சுரக்கவைத்தபடி
அன்றும்
இன்றும்
என்றும்
இருக்கிறீர்கள்
நான் அழுவதை நிறுத்திவிட்டேன் எஸ் பி பி
உங்கள் மருத்துவக்கட்டணம்
உங்களைப் பார்க்க வந்தவர் வராதவர்
எதுவும் வேண்டாம் எனக்கு
நிலவு தூங்கும் நேரம்
தூங்கிடாத குரல் இருக்கிறது
எப்போதும்போல் என்னுடன்
அப்படியென்றால்
நீங்களும் இருக்கிறீர்கள்தானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக