திங்கள், அக்டோபர் 05, 2020

முடியாத கட்டம்

 

கோடு
அது அவர்கள் போட்டது
கட்டம் கட்டவென்றே தொடங்கியது அது
மற்ற பக்கங்களை
இழுக்குமளவு
மசி இல்லை பாவம்
ஒற்றைக்கோடு
நீ தாண்டியபிறகும்
செத்தபாம்பாய்க் கிடக்கிறது

 

*****************************************

முற்பகலின் வெக்கை
உங்கள் சொற்களில் 
லேசான மிளகாய்ப்பொடியைத் தூவி வைக்க,
நீங்கள் எப்பேர்ப்பட்ட
சாமர்த்தியசாலி
கொஞ்சம் உப்புத் தூளைக்
கலந்து விட்டீர்கள்
வழியும் வியர்வை
வயிற்றில் கரைக்கிறது புளியை
எல்லாம் மசாலாதானா
மட்ட மதியத்தில்
கொதிக்கக் கொதிக்க
அனல்வாதம்கருத்துகள் இல்லை:

வாழ்வின் சந்நிதானத்தில்

  கூச்சமாக இருக்கிறது பட்ட காலிலே பட்டுக்கொண்டிருப்பவரிடம் இதுவும் கடந்து போகும் எனத் தத்துவம் சொல்லி நகர ********************************...