திங்கள், அக்டோபர் 05, 2020

ஆமெனில் ..ஆமெனில்

 

எங்கோ ஒலிக்கும்
உன் குரல்
எங்கோ ஒலித்துக் கொண்டிருக்கும் வரை
தலையசைத்துக்கொண்டிருப்பேன்
சிறுகிளை
ஒடியாது ஆடுபறவையே
ஆடு
*******************************************
நீரற்ற ஆற்றங்கரையில்
வெறித்தபடி
நின்றிருந்தவளை
வெறுமனே கடந்து வந்த குற்றவுணர்வு
தாளவில்லை
நடு ஆற்றிலொரு சகதிக்குட்டை கிடக்கும்
அதிலொரு துண்டுத்துணி சிக்கிப்
படபடக்கும்
அதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாளா
ஆமெனில்
ஆமெனில்.....

 

 

கருத்துகள் இல்லை:

வாழ்வின் சந்நிதானத்தில்

  கூச்சமாக இருக்கிறது பட்ட காலிலே பட்டுக்கொண்டிருப்பவரிடம் இதுவும் கடந்து போகும் எனத் தத்துவம் சொல்லி நகர ********************************...