வெள்ளி, அக்டோபர் 02, 2020

வேகப் பொத்தான்களின் உலகம்

 

என்னவாம்
முன்வாசலில் உட்கார்ந்திருக்கும் 
என்னிடம் கேட்கின்றன
ட்ரூக் ட்ரூக் டட்டட்
என்றபடி நகரும் இரண்டு அணில்களும்
கைப்பிடிச்சுவரில் அமர்ந்து 
எழும்பி அமர்ந்து
தவ்விக் கொண்டிருந்த காகம் 
பாதுகாப்பான தூரத்தில் இருந்தபடி
என்ன இங்கே
என்கிறது
தொந்தரவு செய்கிறோமென்று 
புரிவதேயில்லை

செய்யும்போது

 ******************************************************

அம்மிக்குழவியை சரேலென்று தூக்கி நிறுத்தி
மசிந்த கலவையை உருட்டும் லாவகத்தில்
வாழ்வையும் கையாண்ட
எம் பெண்டிரே
கொஞ்சம்,
அதிகம்,
மிக அதிகம்
மிக மிக அதிகம்
என்ற வேகப்பொத்தான்களின்
விசையையும் தாண்டி 
அரைபடும் மனதை
நசுக்குவதா
வழித்தெறிவதா
என்ன செய்தீராம்

 

 

 

கருத்துகள் இல்லை:

வாழ்வின் சந்நிதானத்தில்

  கூச்சமாக இருக்கிறது பட்ட காலிலே பட்டுக்கொண்டிருப்பவரிடம் இதுவும் கடந்து போகும் எனத் தத்துவம் சொல்லி நகர ********************************...