வெள்ளி, அக்டோபர் 02, 2020

ஸ்வர்ணலதா நினைவில்

 

உன் உதடுகளில் கூடுதலாகத்தெரியும்
உதட்டுச்சாயம்
உன் குரலினிமை வழிந்து 
படிந்ததென்று நினைப்பேன்
மாலையில் யாரோ மனதோடு பேச
என்றதும் சிணுங்கும் கருவியின் 
பெயர் தெரியாது
அதையும் 
சற்றே துருத்திக்காணும்
உன் தொண்டைதான் பதிந்தது என்பேன்
எவனோ ஒருவன் 
உன்குரல்வழி வாசித்திருக்க
யாசித்தவர்க் கெல்லாம் 
மின்னும் கண்வழி கருணையோடு நிறைத்தவளே


இங்குதான் உலவுகின்றாய் 

ஆட்டமும் தேரோட்டமுமாக

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...