புதன், அக்டோபர் 07, 2020

2020க்கு நானே சாட்சி

 முட்டைக்கோசை மணக்க மணக்க அவிக்க முடியும் நானே சாட்சி நானே சாட்சி

பச்சை உருளையைப்பிட்டு
மென்று கொள்ளலாம் நானே சாட்சி
நானே சாட்சி
மாம்பூவைக் குளிர் பதனப் பெட்டியில் வைத்திரு
ஐந்தே நாளில் செங்கனி
நானே சாட்சி
நானே சாட்சி
பாலில் வெந்த வெங்காயம்
தயிரில் கரைந்த காப்பித்தூள்
விருந்தின் மேன்மைக்கு நானே சாட்சி
நானே சாட்சி
என்ன கேட்டீர்கள்
2020 என்ன ஆண்டென்றா
கடவுளே !

கருத்துகள் இல்லை:

வாழ்வின் சந்நிதானத்தில்

  கூச்சமாக இருக்கிறது பட்ட காலிலே பட்டுக்கொண்டிருப்பவரிடம் இதுவும் கடந்து போகும் எனத் தத்துவம் சொல்லி நகர ********************************...