திங்கள், அக்டோபர் 05, 2020

கால்வலிக்க நிற்கும் அன்பு

 

நீர்த்துப்போ
நீர்த்துப்போ
அகங்காரமே
கதவைத் தட்டிக்கொண்டே 
கால்வலிக்க நிற்கும் அன்பை
சமாதானம் செய்வது என் பாடு

********************************************

இன்றைய தேநீர்
நன்றாக அமைந்துவிட்டதா
அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பவனே
நீ ஏன் உடனருந்தும்படி 
யாரையும்
அழைப்பதில்லை
**************************************

மதிலுக்கு
அந்தப் பக்கமிருந்து
ஒவ்வொன்றாக வந்து விழுகின்றன
உன் உடைமைகள்
ஒட்டுமொத்தமாக
நீ
குதித்தால் என்னகருத்துகள் இல்லை:

வாழ்வின் சந்நிதானத்தில்

  கூச்சமாக இருக்கிறது பட்ட காலிலே பட்டுக்கொண்டிருப்பவரிடம் இதுவும் கடந்து போகும் எனத் தத்துவம் சொல்லி நகர ********************************...