புதன், அக்டோபர் 07, 2020

காணாமற்போன மயிலிறகு

 முதல் வகுப்பிலிருந்து அவனுக்கு இதுதான் நடக்கிறது குட்டிபோடும் என ஒற்றை மயிலிறகை ஒளித்து வைப்பதும் முதலைப் பறிகொடுப்பதும் ***********************************************

தடும் திடுமென இடித்துவிட்டு
ஒரு தூறல் கூடப்போடாமல்
ஓடிப்போகிற மேகங்களை
அண்ணாந்து பார்த்து
ஒன்றும் நடக்காதது போல நகரும் அளவு
பக்குவப்பட்டு விட்டாயிற்று
எச்சரிக்கையாக எடுத்துவைத்துக்கொண்ட குடை பற்றி
எதற்கு புலம்பல் **************************************

பாலில்லாமல் சர்க்கரையில்லாமல் வாடையேறிய வெந்நீரைக் குடித்து வாழலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்ட பிறகு உன் முகந்திருப்பல்

ஒன்றும் செய்யப்போவதில்லை
**************************************************

தட்டுத்தடுமாறி
அங்கே பிடித்து
இங்கே தாங்கியே
நடந்து
பழகிவிட்டதா
முதுகெலும்பு நேராய் நிற்பதே
பிரமிப்பாகி விடுகிறது ************************************************

புன்னகையோடு கடந்தபோது
நம்மைப்பார்த்து
என்றே
நம்பிய வினை
விதைக்காத குழிகளுக்கு
மாங்கு மாங்கென
நீரிறைக்கும் வேலை பிறகென்ன
இறைத்துச்சிவந்த கரமும்
கசிந்த கண்ணுமாக...
காத்திருங்கள்


கருத்துகள் இல்லை:

வாழ்வின் சந்நிதானத்தில்

  கூச்சமாக இருக்கிறது பட்ட காலிலே பட்டுக்கொண்டிருப்பவரிடம் இதுவும் கடந்து போகும் எனத் தத்துவம் சொல்லி நகர ********************************...