வெள்ளி, அக்டோபர் 02, 2020

உண்மையின் மண்வாசம்

 உண்மைகள்தான் வேண்டுமென்ற பிடிவாதம் உங்களுக்கு உண்மையான அன்பு உண்மையான நட்பு உண்மையான உறவு இவ்வரிசையில் உண்மையான தகவலும் வேண்டுகிறீர்களாமே உண்மைக்கு வெகு அருகில் என்றொரு ஆறுதல் சொல்கிறார்கள் சற்று விலகினாலும் அது பொய் என்றுதானே அழைக்கப்பட்டது பத்தாம்பசலித்தனமான கேள்வியைப் போட்டதும் பக்கம் நிற்பவன் திடுக்கிடுகிறான் உங்கள் மேல் எந்த நூற்றாண்டின் மண் ஒட்டியிருக்கிறது துழாவுகிறது அவன் பார்வை


கருத்துகள் இல்லை:

வாழ்வின் சந்நிதானத்தில்

  கூச்சமாக இருக்கிறது பட்ட காலிலே பட்டுக்கொண்டிருப்பவரிடம் இதுவும் கடந்து போகும் எனத் தத்துவம் சொல்லி நகர ********************************...