வெள்ளி, அக்டோபர் 02, 2020

கழுத்துப்பட்டையிட்ட நாய்க்குட்டி

 

ஆடையில் இறைந்து கிடக்கும் பூக்கள்
எப்படியும்
கடந்த பருவத்தை
இழுத்து வந்துவிடலாம்
அதனிடம் நீட்ட
ஒரு நிஜப்பூ பறித்துக்கொள்

 

 

**********************************************

 

இந்த சந்திப்பினால்தான்
எல்லாத் தொல்லையும்
அதற்கு முந்தைய பிம்பத்தின் 
மேலேறும் கரையானைத் 
தாங்க இயலாது நெளிகிறது
மனது

நாய்க்குட்டிக்கு
அழகிய கழுத்துப்பட்டை போடும்
சீமாட்டி

சொல்லித்தா எனக்கும்

கருத்துகள் இல்லை:

வாழ்வின் சந்நிதானத்தில்

  கூச்சமாக இருக்கிறது பட்ட காலிலே பட்டுக்கொண்டிருப்பவரிடம் இதுவும் கடந்து போகும் எனத் தத்துவம் சொல்லி நகர ********************************...